🗐 பல்பகுதியங்கள் ( polymeric substances)
பெருமளவான எண்ணிக்கையுடைய மீள்வரும் அலகுகள் இணக்கம் அடைவதால் பல்பகுதியங்கள் உருவாகின்றன.
உதாரணம் : n(C2H4) → பொலித்தீன்
🖸 இவற்றை பல்வேறு வகையாக பிரிக்கலாம்.
© LearnMPC 2015 - WWW.LEARNMPC.BLOGSPOT.COM | Twitter: @learnmpc | Facebook: www.facebook.com/learnmpc
To Download this Pic Click Here
இயற்கை,செயற்கை அடிப்படையில் அடிப்படையில் பாகுபடுத்தப்படலாம்.
1.இயற்கைப் பல்பகுதியம்
2.தொகுப்புக்குரிய பல்பகுதியம்
1.இயற்கைப் பல்பகுதியம்
- இயற்கை பல்பகுதியங்கள் இயற்கையாகவே உயிர்த்தொகுதிகளினுள்
தொகுக்கப்பட்டவை.
உதாரணம் : இயற்கை இறப்பர், புரதங்கள், நொதியங்கள்
2.தொகுப்புக்குரிய பல்பகுதியம்
- தொகுப்புக்குரிய பல்பகுதியங்கள் மனிதனால் செயற்கையாக
தயாரிக்கப்பட்டவை.
உதாரணம் : பொலித்தீன், பொலிவைனைல்குளோரைட்டு, பொலிஎசுத்தர்,
ரெப்லோன், பேக்லைற்று , நைலோன்,யூரியா-போமல்டிகைட்டு.
பல்பகுதியங்கள் அவை உருவாகும் முறையின் அடிப்படையில் பாகுபடுத்தப்படலாம்.
1.கூட்டல் பல்பகுதியம் (addition polymers)
2. ஒடுங்கல் பல்பகுதியம் (condensation polymers)
கூட்டல் பல்ப்பகுதியம்
பொலித்தீன்
வெப்பம் இளக்கும் பல்பகுதியம்
பொலித்தீன் மணமற்றது
சுவையற்றது
பாரமற்றது
நச்சுத் தன்மையற்றது
ஒப்பீட்டளவில் மலிவானது.
இது பதார்த்தங்களை பொதி செய்வதற்கும்
ஆசன மேலுறை, போத்தல், விளையாட்டுப்
பொருட்கள், குப்பை போடும் பை, பாத்திரம் போன்றவை செய்யப் பயன்படுத்தப்படும்.
பொலிவைனைல் குளோரைட்டு
இதன் ஒரு பல்பகுதியம் வைனைல் குளோரைட்டு ஆகும்.
இது ஒரு வெப்பம் இளக்கும் பல்பகுதியமாக உள்ளபோதும் குளோரினை
கொண்டிருப்பதனால் இலகுவில் தீப்பற்றி எரியாது.
இதன் சங்கிலிக்குஇடையிலான கவர்ச்சி விசை பொலித்தீன் சங்கிலிகளுக்கிடையிலான விசையிலும்மிக அதிகமானது. இதனால் வன்மையானது.
நிலைநிறுத்தும் கருவி, நிரப்பும்கருவி ஆகியவற்றை உபயோகித்து பதனிடுவதன் மூலம் வேறொன்றாக மாறுபடும்.
தன்மையுள்ள பதார்த்தமாக மாற்றப்படக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பியல்பு ஆகும்.
நீர்க் குழாய் செய்வதற்கும், ஜலதாரைகள் செய்வதற்கும், மின்கம்பிகளை காவலிடுவதற்கும்,நிலகவசம்,ஆசனஉறை,குடைத்துணி,மழைஅங்கி
போன்றவை செய்யவு ம் பயன்படும்.
பொலிஸ்ரைரீன்
பொலிஸ்ரைரீன் ஒரு பகுதியம் ஸ்ரைரீன் ஆகும்.
வெப்பம் இளக்கும் பல்பகுதியம்.
பொலிஸ்ரைறீன் ஒளி ஊடுருவக் கூடியபதார்த்தம்.
இது நுரையாக்கப்பட்டு, திண்மமாக்கப்படும்.
இது காவலியாகவும், பொதி செய்தற்கும் பயன்படும்.
இது ரெஜிபோம் என அழைக்கப்படும்.
ரெப்லோன்
ரெப்லோனின் ஒரு பகுதியம் நாற்புளோரோ எதீன் ஆகும்.
வெப்பம் இளக்கும் பல்பகுதியம். ரெப்லோன் ஈரநிலைத் திறனற்றது,
சடத்துவமானது.
ஒட்டும் தன்மையற்றது.
உயர்வெப்பத்தினாலும் இரசாயனப் பதார்த்தங்களாலும் பாதிக்கப்படமாட்டாது. காரணம் அலசனைக் கொண்டது.
அரிப்புக்குட்படாது. எனவே, சமையற் பாத்திரங்களை உறுதிப்படுத்தவும், இரசாயனக்கைத்தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படும்.
இயந்திரங்களின் குழாய்கள்,மூடித்தாளிடும் முத்திரை செய்வதற்கும் உலோகப் பகுதிகளுக்கு இடையில்வைக்கப்படும் வளையங்கள் செய்யவும் நெருப்புப் பிடிக்காத துணிசெய்வதற்கும் பயன்படும்.
பொலிஐசோபிறீன் (இயற்கை இறப்பர்)
இறப்பரானது ரயர், ரியுப், மெத்தை, கையூறை தயாரிப்பிலும்இ மருத்துவத்
துறையிலும் பயன்படுத்தப்படும்.
இயற்க்கை இறப்ப்பரை வல்க்கனைசுப்ப்படுத்த்தல்
இறப்பரின் மீள்தகவூத் தன்மைக்கு சிஸ்-பொலி ஐசோபிறின் அமைப்பே
காரணமாகும். இறப்பரை வன்மையாக்குவதற்கு இறப்பரின் மீள்தகவுத் தன்மை மாற்றப்பட வேண்டும். எனவே இயற்கை இறப்பரை அதன் நிறையின் 1%-3%கந்தகத்துடன் வெப்பப்படுத்துவதன் மூலம் வன்மையாக்கப்படுகிறது. இது வல்கனைசுப்படுத்தல் எனப்படும். வல்கனைசுப்படுத்தும் பொழுது பொலி ஐசோபிறீன் சங்கிலிகள் குறுக்காக கந்தகத்தினால் பிணைக்கப்படுகின்றன.இதனால், இறப்பரின் மீள்தன்மை அதிகரிப்பதுடன், வன்மையாக்கப்படுகின்றது.
25 % - 35 % கந்தகத்துடன் வெப்பமேற்றுவதன் மூலம் எபனைற்று (ebonite)
பெறப்படும். வல்கனைசுப்படுத்திய இறப்பர் ஒட்டும்தன்மையற்றது. கூடியளவு பொறிமுறை இயல்புகளை உடையது.
இறப்ப்பர் சேர்வையாக்க்கம்
குறித்த தேவைக்கு ஏற்றத்தக்கதாக இயற்கை இறப்பர் அல்லது மற்றைய
இறப்பர்கள் அமையாது விடலாம். ஆனால் அதனுடன் கலக்கப்படும் பதார்த்தங்களின் அடிப்படையில், இறப்பர் சேர்வையாக்கம் அவ்இறப்பரை எமது தேவைக்கு உகந்த பதார்த்தமாக மாற்றுகின்றது. இறப்பர் சேர்வையாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்களை அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தலாம்.
1. Elastomers
2. வல்கனைசுப்படுத்தும் கருவி
3. வேக வளர்ச்சிக் கருவி(Accelerators)
4. துhண்டி ஃ நிரோதி
5. Process aids
6. மென்மையாக்கி, இளக்கி
7. வலிதாக்கிகள் ஃ நிரப்பிகள்
8. Age resistors
² உதாரணமாக, cover of a conveyor belt சேர்வைகளாக பின்வருவன காணப்படும்.
இயற்கை இறப்பர் (Elastomer)
கரிய காபன் (Filler)
ZnO (Accelerator)
ஸ்ரியறிக் அமிலம் (தூண்டி)
இறப்பர் பதனிடும் எண்ணெய்
றெசின்
N-Cyclohexylbenzothiozole-2-sulfonamide (CBS)
கந்தகம் (வல்கனைசுப்படுத்தும் கருவி)
ஒடுங்க்கல் பல்பகுதியம்
ஒடுங்கல் பல்பகுதியாக்கத்தில் ஒரு பகுதியங்கள் இணையு ம் பொழுது H2O , NH3 HCl போன்ற எளிய மூலக்கூறுகள் வெளியேற்றப்படும்.
பொலி ஏமைட்டு
வெப்பம் இளக்கும் பல்பகுதியம். இது கம்பளியூடன் ஒத்த அமைப்புடையதாக
காணப்படினும்இ நைலோன் மென்மை அற்றதாகவு ம், இயற்கை நார்களைப் போன்ற
நீரை உறிஞ்சும் தன்மையற்றதாகவும் காணப்படும். எனினும், நீடித்த பாவனையுயது.
கழுவிப் பாவிப்பதற்கு ஏற்றதாகவு ம் உள்ளது.
நைலோன் ஆடைகள்தயாரிக்கப் பயன்படும்.
நைலோனின் மீள்தகவியல்பு, வன்மை ஆகியன
காலுறை தயாரிக்கவும், இறுக்கமான உடைகள் தயாரிப்பதற்கும் ஏற்றது ஆகின்றது.

வெப்ப இயல்பை அடிப்படையாக வைத்து பல்பகுதியங்கள் பின்வருமாறு
பிரிக்கப்படும்.
1.வெப்பம் இளக்கும் பல்பகுதியங்கள்
2.வெப்பம் இறுக்கும் பல்பகுதியங்கள்
- வெப்பம் இளக்கும் பல்பகுதியங்கள்
வெப்பமாக்குவதன் மூலம் மென்மையாக்கப்படலாம். குளிரவிடும்போது வன்மையாகும். மீண்டும் பலமுறை இளகவிடப்படக்கூடியது. சங்கிலிகளுக்கிடையிலான கவர்ச்சி விசைகள் நலிவானவை.
உதாரணம்: பொலித்தீன், பொலிஸ்ரைறின்
- வெப்பம் இறுக்கும் பல்பகுதியங்கள்
உற்பத்தியின் முதல் கட்டத்தின்போது அச்சில் வார்க்கப்படும்போது இவை
இறுக்கமடையூம். பின் மீண்டும் வெப்பமாக்கப்படுவதன் மூலம் மீள இளக்கப்
படமாட்டாது. பல்பகுதியச் சங்கிலிகள் குறுக்கு இணைப்புக்களை உருவாக்கி
முப்பரிமாணக் கட்டமைப்பை ஏற்படுத்தும்.
உதாரணம்: பேக்லைட், யூரியா போமல்டிகைட்டு
🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣🌣
கூட்டல் பல்ப்பகுதியம்
பொலித்தீன்
வெப்பம் இளக்கும் பல்பகுதியம்
பொலித்தீன் மணமற்றது
சுவையற்றது
பாரமற்றது
நச்சுத் தன்மையற்றது
ஒப்பீட்டளவில் மலிவானது.
இது பதார்த்தங்களை பொதி செய்வதற்கும்
ஆசன மேலுறை, போத்தல், விளையாட்டுப்
பொருட்கள், குப்பை போடும் பை, பாத்திரம் போன்றவை செய்யப் பயன்படுத்தப்படும்.
பொலிவைனைல் குளோரைட்டு
இதன் ஒரு பல்பகுதியம் வைனைல் குளோரைட்டு ஆகும்.
இது ஒரு வெப்பம் இளக்கும் பல்பகுதியமாக உள்ளபோதும் குளோரினை
கொண்டிருப்பதனால் இலகுவில் தீப்பற்றி எரியாது.
இதன் சங்கிலிக்குஇடையிலான கவர்ச்சி விசை பொலித்தீன் சங்கிலிகளுக்கிடையிலான விசையிலும்மிக அதிகமானது. இதனால் வன்மையானது.
நிலைநிறுத்தும் கருவி, நிரப்பும்கருவி ஆகியவற்றை உபயோகித்து பதனிடுவதன் மூலம் வேறொன்றாக மாறுபடும்.
தன்மையுள்ள பதார்த்தமாக மாற்றப்படக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பியல்பு ஆகும்.
நீர்க் குழாய் செய்வதற்கும், ஜலதாரைகள் செய்வதற்கும், மின்கம்பிகளை காவலிடுவதற்கும்,நிலகவசம்,ஆசனஉறை,குடைத்துணி,மழைஅங்கி
போன்றவை செய்யவு ம் பயன்படும்.
பொலிஸ்ரைரீன்
பொலிஸ்ரைரீன் ஒரு பகுதியம் ஸ்ரைரீன் ஆகும்.
வெப்பம் இளக்கும் பல்பகுதியம்.
பொலிஸ்ரைறீன் ஒளி ஊடுருவக் கூடியபதார்த்தம்.
இது நுரையாக்கப்பட்டு, திண்மமாக்கப்படும்.
இது காவலியாகவும், பொதி செய்தற்கும் பயன்படும்.
இது ரெஜிபோம் என அழைக்கப்படும்.
ரெப்லோன்
ரெப்லோனின் ஒரு பகுதியம் நாற்புளோரோ எதீன் ஆகும்.
வெப்பம் இளக்கும் பல்பகுதியம். ரெப்லோன் ஈரநிலைத் திறனற்றது,
சடத்துவமானது.
ஒட்டும் தன்மையற்றது.
உயர்வெப்பத்தினாலும் இரசாயனப் பதார்த்தங்களாலும் பாதிக்கப்படமாட்டாது. காரணம் அலசனைக் கொண்டது.
அரிப்புக்குட்படாது. எனவே, சமையற் பாத்திரங்களை உறுதிப்படுத்தவும், இரசாயனக்கைத்தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படும்.
இயந்திரங்களின் குழாய்கள்,மூடித்தாளிடும் முத்திரை செய்வதற்கும் உலோகப் பகுதிகளுக்கு இடையில்வைக்கப்படும் வளையங்கள் செய்யவும் நெருப்புப் பிடிக்காத துணிசெய்வதற்கும் பயன்படும்.
பொலிஐசோபிறீன் (இயற்கை இறப்பர்)
இறப்பரானது ரயர், ரியுப், மெத்தை, கையூறை தயாரிப்பிலும்இ மருத்துவத்
துறையிலும் பயன்படுத்தப்படும்.
இயற்க்கை இறப்ப்பரை வல்க்கனைசுப்ப்படுத்த்தல்
இறப்பரின் மீள்தகவூத் தன்மைக்கு சிஸ்-பொலி ஐசோபிறின் அமைப்பே
காரணமாகும். இறப்பரை வன்மையாக்குவதற்கு இறப்பரின் மீள்தகவுத் தன்மை மாற்றப்பட வேண்டும். எனவே இயற்கை இறப்பரை அதன் நிறையின் 1%-3%கந்தகத்துடன் வெப்பப்படுத்துவதன் மூலம் வன்மையாக்கப்படுகிறது. இது வல்கனைசுப்படுத்தல் எனப்படும். வல்கனைசுப்படுத்தும் பொழுது பொலி ஐசோபிறீன் சங்கிலிகள் குறுக்காக கந்தகத்தினால் பிணைக்கப்படுகின்றன.இதனால், இறப்பரின் மீள்தன்மை அதிகரிப்பதுடன், வன்மையாக்கப்படுகின்றது.
25 % - 35 % கந்தகத்துடன் வெப்பமேற்றுவதன் மூலம் எபனைற்று (ebonite)
பெறப்படும். வல்கனைசுப்படுத்திய இறப்பர் ஒட்டும்தன்மையற்றது. கூடியளவு பொறிமுறை இயல்புகளை உடையது.
இறப்ப்பர் சேர்வையாக்க்கம்
குறித்த தேவைக்கு ஏற்றத்தக்கதாக இயற்கை இறப்பர் அல்லது மற்றைய
இறப்பர்கள் அமையாது விடலாம். ஆனால் அதனுடன் கலக்கப்படும் பதார்த்தங்களின் அடிப்படையில், இறப்பர் சேர்வையாக்கம் அவ்இறப்பரை எமது தேவைக்கு உகந்த பதார்த்தமாக மாற்றுகின்றது. இறப்பர் சேர்வையாக்கத்திற்கு பயன்படுத்தப்படும் பதார்த்தங்களை அவற்றின் தொழிற்பாட்டின் அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தலாம்.
1. Elastomers
2. வல்கனைசுப்படுத்தும் கருவி
3. வேக வளர்ச்சிக் கருவி(Accelerators)
4. துhண்டி ஃ நிரோதி
5. Process aids
6. மென்மையாக்கி, இளக்கி
7. வலிதாக்கிகள் ஃ நிரப்பிகள்
8. Age resistors
² உதாரணமாக, cover of a conveyor belt சேர்வைகளாக பின்வருவன காணப்படும்.
இயற்கை இறப்பர் (Elastomer)
கரிய காபன் (Filler)
ZnO (Accelerator)
ஸ்ரியறிக் அமிலம் (தூண்டி)
இறப்பர் பதனிடும் எண்ணெய்
றெசின்
N-Cyclohexylbenzothiozole-2-sulfonamide (CBS)
கந்தகம் (வல்கனைசுப்படுத்தும் கருவி)
ஒடுங்க்கல் பல்பகுதியம்
ஒடுங்கல் பல்பகுதியாக்கத்தில் ஒரு பகுதியங்கள் இணையு ம் பொழுது H2O , NH3 HCl போன்ற எளிய மூலக்கூறுகள் வெளியேற்றப்படும்.
பொலி ஏமைட்டு
வெப்பம் இளக்கும் பல்பகுதியம். இது கம்பளியூடன் ஒத்த அமைப்புடையதாக
காணப்படினும்இ நைலோன் மென்மை அற்றதாகவு ம், இயற்கை நார்களைப் போன்ற
நீரை உறிஞ்சும் தன்மையற்றதாகவும் காணப்படும். எனினும், நீடித்த பாவனையுயது.
கழுவிப் பாவிப்பதற்கு ஏற்றதாகவு ம் உள்ளது.
நைலோன் ஆடைகள்தயாரிக்கப் பயன்படும்.
நைலோனின் மீள்தகவியல்பு, வன்மை ஆகியன
காலுறை தயாரிக்கவும், இறுக்கமான உடைகள் தயாரிப்பதற்கும் ஏற்றது ஆகின்றது.
Comments
Post a Comment