Hydrogen bonds [ஐதரசன் பிணைப்பு]

Like us on fb.com/learnmpc to reach us..

ஐதரசன் பிணைப்பு/Hydrogen bonds



Hydrogen bond is a special type of electrostatic interaction between a hydrogen atom contently bonded to an electronegative element (X) and another electronegative element (Y) such
as fluorine or oxygen or nitrogen which has one or more lone pairs. This interaction can

be represented by







Hydrogen bonds are the strongest of all intermolecular forces.

*முனைவுடைய ஐதரசனுக்கும் மின் எதிர் அணுவின் e க்குமிடையே தோன்றுகின்ற இருமுனைவு-இருமுனைவு இடைஈர்ப்பு ஐதரசன் பிணைப்பு எனப்படும்.







Bond type                                       Bond energy/kJ mol-1

H bonding                                            10 - 40
Other inter molecular interactions        0.1 - 10

 Examples:

1) HF
ஒரு HF மூலக்கூறு இரு H பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.

2) H2O (Hydrogen bonds)



3) ஒரு NH3  மூலக்கூறு 4 H பிணைப்புகளை ஏற்படுத்துகிறது.



Existence of hydrogen bonding can be proved by referring to the variation of boiling temperatures

of group 15, 16 and 17 hydrides.

Variation of boiling points of group 15, 16 and 17 hydrides

எனவே F,O,Nஉடன் H நேரடியாக இணைந்துள்ள மூலக்கூறுகளில் தோன்றும் முனைவினால் அம்மூலக்கூறுகளிடையே H பினைப்பு தோன்றும்.

ஐதரசன் பிணைப்பின் வலிமை அதிகமாக இருப்பதற்கான காரணங்கள்.
Why  the hydrogen bond is the strongest among all?

1> முனைவாக்கப்பட்ட நிலையில் ஐதரசனின் கரு அதிகளவில் வெளிக்காட்டப்படல்.

2> ஐதரசன் அணு சிறிதாக இருத்தல்.

பிணைப்பின் வலிமை

H-F-----H-F > H-O-----H-O > H-N-----H-N

குறித்த ஒரு மூலக்கூறில் முனைவுடைய தொகுதிகள் அருகருகே இருப்பின் அவ்ற்றிடையே இடை ஈர்ப்புகள் தோன்றலாம்.

Eg: 

ஐதரசன் பிணைப்பின் பயன்கள்.

1) ஐதரசன் பிணைப்பினால் நீர் திரவமாக (அறை வெப்பநிலையில்) காணப்படுகிறது.Bifurcated and over-coordinated hydrogen bonds in water

2)ஐதரசன் பிணைப்பினால் நீரின் மேல் பனிக்கட்டி மிதக்கிறது.

பனிக்கட்டியில் நீர் மூலக்கூறிலுள்ள O ஆக்கும் இரு பங்கீட்டுப் பிணைப்பும் இரு H பிணைப்பும் நான்முகி அமைப்பில் அமைந்து நீர் மூலக்கூறுகள் ஒழுங்காக அடுக்கப்பட்ட திண்ம சாலகம் தோன்றுவதால் அவற்றிடையே இடைவெளி அதிகரித்து திரவ நீரை விட பனிக்கட்டியின் அடர்த்தி குறைகிறது.


3)ஐதரசன் பிணைப்பினால் நீரின் தன்வெப்பக்கொள்ளளவு உயர்வாக இருப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது நீர் இழப்பு தடுக்கப்படுகிறது.

4)ஐதரசன் பிணைப்பினால் நீரின் மின் கடத்துதிறன் அதிகரிக்கிறது.

5)உயிர் இரசாயன கட்டமைப்புக்களில் ஐதரசன் பிணைப்பு உதவுகிறது.

File:ADN animation.gif
*புரதத்தின் விறைப்புத் தன்மைக்கு உதவும்.

*DNA இன் அமைப்பிற்கு உதவும்.Hydrogen bonds in DNA and proteins

6)ஐதரசன் பிணைப்பினால் நீர் மேற்பரப்பு இழுக்கப்பட்ட தோல் போன்று தொழிற்படும்.இதனால் நீர் பூச்சிகள் நீர் மேற்பரப்பில் நடக்கக் கூடியதாக இருக்கும்.(நீரின் மேற்பரப்பிழுவிசை அதிகமாகும்)

7)அடர்த்தி வேறுபட்ட இரு திரவங்கள் கலப்பதற்கு உதவும்

Eg:நீரும் எதனோலும்

பங்கீட்டுப் பிணைப்பில் ஐதரசன் பிணைப்பு இருப்பதற்கான ஆதாரங்கள்.

#பனிக்கட்டி நீரின் மேல் மிதத்தல்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


#ஒரே கூட்டத்தை சேர்ந்த பின்வரும் சேர்வைகளில் மூலக்கூற்றுத் திணிவு குறைந்த சேர்வைகளின் கொதிநிலை அதிகமாக காணப்படுதல்.
Eg:கொதிநிலை
H2O > H2S
HF > HCl
NH3 > PH3

#சமனான மூலக்கூற்றுத் திணிவுடைய வெவ்வேறு சேர்வைகளின் கொதிநிலை அதிக வேறுபாட்டை காட்டுதல்.
Eg:கொதிநிலை
C2H5-O-H                             >                   CH3-O-CH3
மூலக்கூற்றிடை H                     மூலக்கூற்றிடை இருமுனைவு இருமுனைவு கவர்ச்சியை கொண்டது
பிணைப்பை கொண்டது

#முனைவற்ற கரைப்பானினுள் அசற்றிக் அமிலத்தின் மூலர்த்திணிவை துணிகையில் 120 ஆக(மூலர்த்திணிவின் இரு மடங்காக) பெறப்பட்டது.
இதற்கு இம்மூலக்கூறு H பிணைப்பால் தமக்கிடையே இணைந்திருப்பதே காரணம்.
learn Maths Physics Chemistry

Comments