Manufacture of Soap [சவர்க்கார தயாரிப்பு]
learn Maths Physics Chemistry
Oils, fats or their fatty acids and inorganic water soluble bases (NaOH, KOH) are used as
raw materials.
• The industrial soap making involves four basic steps.
• கைத்தொழில் ரீதியாக சவர்க்கார தயாரிப்பு 4 படிகள் கொண்டது
• Step 1 - Saponification /சவர்க்காரமாக்கல்
The saponification process involves the mixing of tallow (animal fat), coconut oil
or vegetable oil with sodium hydroxide and the application of heat. The process
results in formation of soap, which is a salt of long chain carboxylic acid.
• விலங்கு அல்லது தாவர எண்ணெய் கணிக்கப்பட்ட அளவு NaOH கரைசல் உடன் சேர்த்து கலக்கிய வண்ணம் வெப்பமாக்கப்படும்.
• இதன் போது எசுத்தர் கார நீர்ப் பகுப்படையும்.(தாவர எண்ணெய் விலங்கு கொழுப்பு என்பன நீண்ட காபன் சங்கிலி சேதன அமிலங்களின் கிளிசரொல் எசுத்தர்களாகும்) இங்கு நீண்ட C சங்கிலி கொண்ட காபொக்சிலிக் அமிலத்தின் சோடிய உப்பு பெறப்படும்.இதுவே சவர்க்காரம் எனப்படும்.
• Step 2 - Removal of glycerin / Glycerine அகற்றல்
Glycerin is more valuable than soap, and hence most of it is removed for its uses in
more expensive cosmetic products. Some of the glycerin is left in soap to make it
soft and smooth.
• சவர்க்காரத்தினை விட கிளீசரீன் பெற்மதி மிக்கதாகும். எனவே கூடியளவு கிளீசரீன் அகற்றப்படும். இருந்த போதிலும் சவர்க்காரத்தினை மென்மையாக்க சிரிதளவு கிளீசரீன் சவர்க்காரத்துடன் விடப்படுகிறது.
• Step 3 - Soap purification / சவர்க்காரத்தை தூய்மையாக்கல்
In the soap purification stage any remaining sodium hydroxide is neutralized with a
weak acid like citric acid and two thirds of the remaining water is removed to
obtain pure soap.
• தூய்மையாக்கலின் போது மிகுதியாக அல்லது மேலதிகமாக உள்ள NaOH ஆனது சிற்றிக் அமிலம் போன்ற மென்னமிலங்களினால் நடுநிலையக்கப்படும்.
• மிகுதியாகவுள்ள நீரின் 2/3 பங்கு அகற்றப்படும். இதன் மூலம் தூய சவர்க்காரம் பெறப்படும்.
• Step 4 - Finishing / முடிவு நிலை
The final stage of industrial soap manufacturing process, finishing stage involves
mixing of additives such as colours, preservatives and perfume into soap, which is
then shapedinto bars for sale.
• Instead of NaOH, KOH could be used. The soap manufactured using KOH is softer
on skin. Therefore KOH is used mainly in the manufacture of baby soap.
• The percentage of RCOO-Na+ in the soap is referred as total fatty matter(TFM) value.
இறுதிப்படியில் NaCl கரைசல் சேர்க்கப்படும். இது சவர்க்காரத்தின் படிவாதலை கூட்டுவதோடு தற்காப்பியாகவும்( பங்கசு தொழிற்பாட்டை தடுக்க) தொழிற்படும்.
நிறச்சாயங்களும் வாசனை பொருட்களும் சேர்க்கப்பட்டு அவை சவர்க்கார கட்டிகளாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு விடப்படும்.
NaOH இற்கு பதிலாக KOH பயன்படுத்தலாம். K கொண்ட சவர்க்காரம் தோலுக்கு மென்மையானதாகும். குழந்தைகளுக்கான சவர்க்காரம் KOH இனால் தயாரிக்கப்படுகிற்து. சவர்க்காரத்தில் RCOONa / RCOOK இன் நூற்று வீதம் மொத்த கொழுப்பு பதார்த்தம் எனப்படும். இதுவே TFM எனப்படும்.
Comments
Post a Comment